Sunday, October 30, 2011

எமது தேசிய மொழியான தமிழ் மொழியை எம்முறவுகள் எவ்வாறு பின்பற்றுகிறார்கள்????? சிறப்புக்கட்டுரை

எமது தேசிய மொழியான தமிழ் மொழியை எம்முறவுகள் எவ்வாறு பின்பற்றுகிறார்கள்????? சிறப்புக்கட்டுரை 



தமிழ் மொழி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு தொன்றிய மொழியாகும். இம்மொழி பல காலகட்டங்களில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்த மொழியாகும். எமது தமிழ் மொழியைப்பாதுகாக்க பல பேர் உயிரைக்கொடுத்தும்போராடினார்கள். ஆனால் தற்போதைய எம்மொழியின் நிலைதான் சற்று கவலைப்படும் விதமாக உள்ளது. தமிழ் மொழியை உருவாக்குவதை விட பேணிப் பாதுகாப்பதே கஸ்ரம். தற்போதைய புலம்பெயர்தேசங்களில் வாழும் எம் இளம்சந்ததியினரது நிலமை தான் சற்று கவலையூட்டுவதாக உள்ளது.

ஏன் என்றால் தமிழன் தனது தாய் மொழியான தமிழ் மொழியை பேச வெட்கப்படுகிறான், வேதனைப்படுகிறான், துக்கப்படுகிறான், துயரப்படுகிறான். இந்தக் கொடுமை வேறு எந்த மொழிக்கும் ஏற்பட்டதுண்டா? தனது தாய் மொழியையே பேச வெட்கப்படுபவன் எனது அருமைத் தமிழனைத் தவிர வேறு யார் இருக்க முடியும். கலாச்சார நிகழ்வுகளில் பல அழைப்பிதழ்கள் வருகிறது. அதில் தமிழன் தனது பெயரைக்கூட தமிழில் எமுதுவதை விடுத்து தம்பிமுத்து வேலாயுதம் என்பதற்குப் பதிலாக T, வேலாயுதம் என்று எழுதுகிறார்களே இவர்களை எங்கு சென்று திருத்தலாம் உறவுகளே. தமிழன் தனது பெயரையே வேற்று மொழியில் எழுத ஆசைப்பட்டான். அதனாலே தாழ்ந்து போனான். தமிழ் மொழியைத்தவிர வேறு எந்த மொழியாவது இரண்டு மொழிகள் கலக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறதா. இல்லை எமது அண்மை தேசமான பிரேஞ்சு தேசத்திலே போய்ப்பாருங்கள். பிரேஞ்சு மொழி பிரேஞ்சு மொழியில் எழுதப்பட்டிருக்கும். ஆங்கில மொழி ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருக்கும். ஏன் நீ மட்டும் தாழ்ந்து போனாய். உனக்கு ஏன் இவ்வளவு தாழ்வு மனப்பான்மை. ஒரு காலத்தில் இத்தமிழ் மொழியைக்காக்கத்தான் இரவு பகல் பாராது போரிட்டார்கள். நாங்கள் அவர்கள் போல் போராடக்கூறவில்லை. போராட முடியாவிட்டாலும் அதை அழிய விடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு என்ன பெருமை இல்லை நாடு இல்லை என்பதைத் தவிர. உலகத்திற்கே உலகப்பொதுமறை தந்தான் உன் முப்பாட்டன் வள்ளுவன், இந்ந உலகத்திற்கு வள்ளுவன் தராத ஒன்றை வேறு ஏதாவது ஒரு நூலாவது தந்திருக்கிறது என்று யாராவது கூறமுடியுமா. வேறு இனத்தவன் இந்த நூலை தனது மொழிகளிற்கு மாற்றி படிக்க ஆரம்பித்தான். ஆனால் தனது சொந்த மொழியில் இருக்கும் புத்தகத்தை தவிர்த்து வேற்று மொழிகளிலே இருக்கும் திருக்குறள் புத்தகங்களையே விரும்பி விரும்பி வேண்டிப் படித்தான். அதுவும் பணம் கொடுத்து வாங்கிப் படித்தான். இப்படியான தமிழர்களை என்ன சொல்லி திருத்த முடியும் என் அருமை உறவுகளே. இப்படியாக தமிழர்களே தமது மொழியை பேணாது விட்டால் பிரேஞ்சுக்காரனும், ஜேர்மனியக்காரனுமா வந்து உன் மொழியைக்காப்பாற்றுவான். யோசித்துப்பாருங்கள். உனது மொழி ஏன் தாழ்ந்து போனது. அன்று ஒரு தம்பி கூறுகிறான். நான் தமிழில் கதைச்சா தமிழனே மதிக்கிறானில்லையே அப்ப வேறு யார் மதிப்பாரய்யா என்று கேக்கிறான். உன்னை மதிக்காத தமிழனை ஏறி மிதிடா. ஏன் அவன் உன்னை மதிக்க வேண்டும். தமிழன் தமிழனாக இருக்க வெட்கப்பட்டதனாலேயே தமிழன் தனது மொழியையும் காக்கத் தவறினான்.

முன்னைய காலத்திலே தமிழனைக்காக்க போரிட்டார்கள் வென்றார்கள். ஆனால் எமது இனத்தை குடியமர்த்த மறந்தார்கள். தமிழனின் பிறவிப்பெருந்தன்மையால் வந்தோரையெல்லாம் வாழவைத்தான். இதனால் தான் அவன் தனது சொந்த நாட்டில் வாழமுடியாமல் நாடு நாடாக அகதிகளாக நக்கிப்பிழைக்கிறான். முன்னைய அரசர்கள் தாம் பிடித்த வெற்றிகொண்ட இடங்களிலெல்லாம் தமிழர்களை குடியமர்த்தியிருந்தால் இன்று உலகில் அரைவாசி நாடுகள் தமிழர் நாடுகளாக இருந்திருக்கும். இதனால் எமது தமிழும் வளர்ந்திருக்கும். இதை செய்தார்களா எம்முன்னோர்கள். இல்லை பல நாடுகளில் கொடிகளை நட்டார்கள் ஆனால் குடியேற்ற தவறினார்கள். இதனால் இன்றுவரை தமிழும் தமிழனும் நாடு நாடாக அலைந்து அலைந்து நக்கி பிழைக்க வேண்டிய நிலமை ஏற்பட்டிருக்கிறது. தமிழனுக்கென்றொரு நாடில்லை தமிழன் வாழாத நாடுமில்லை. தமிழனது பிறவிப் பெருந்தன்மை இவர்களை தடுத்தது. வந்தவரையெல்லாம் வாழவைத்த தமிழ் தனது வாழ்வை அலைந்து திரிந்தே கழிக்க வேண்டியதாய் இருந்தது.

ஐயோ என் மொழி அழிகிறதே, என் மொழி சிதைகிறதே என்று யாராவது கவலைப்பட்டதுண்டா, ஆத்திரப்பட்டதுண்டா?தமிழன் தன் மேல் அடி விழாத வரை சும்மா நின்றான். இதனால் ஏறி மிதிக்க வேற்றினத்தவன் புறப்பட்டான். இது தான் நிகழ்ந்தது. நடக்கிறது.என் அருமை உறவுகளே இனி நீங்கள் தான் எமது மொழியைப்பாதுகாக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் சொந்த மொழியை கற்றுக்கொடுங்கள். நீங்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் படியுங்கள் அதை எண்ணி தமிழன் தலைநிமிர்வான். ஆனால் தாய்மொழி தெரியாதவன் எத்தனை மொழிபடித்தும்பயனில்லாதவனாய் சென்று விடுவான். தாய் மொழி தெரியாத எந்த சமூகத்தையும் எந்த இனமும் மதிக்காது. மன்னிக்காது. என்பதை மட்டும் மறவாதீர்கள். உங்கள் தேசிய மொழியை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனின் கைகளில் தான் தங்கியுள்ளது. நீங்கள் உங்கள் குழந்தைகளை வீட்டில், தமிழர் கலாச்சார நிகழ்வுகளிலாவது தமிழில் கதைக்க வைக்க முயற்சி செய்யுங்கள். நீங்களும் தமிழில் உரையாடுங்கள் என உங்களில் ஒருவனாக அன்பாக மிகவும் தாழ்மையுடன் தமிழன் என்ற உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க தமிழ்....... வெல்க தமிழர்

ஈழதேசத்திற்காக எழிச்சித்தமிழன் ஈழப்பிரியன்

திராவிடர்களே உங்களிடம் சில கேள்விகள்?

திராவிடர்களே உங்களிடம் சில கேள்விகள்? 

  1.  உண்மையிலேயே உங்களின் இனம் எது?
  2. எந்த ஒரு தெலுங்கனையோ, மலையாளியையோ, கன்னடனையோ நாங்கள் திராவிடர் என்று ஒப்புக்கொள்ள வைப்பீர்களா?
  3. ஈழத் தமிழர்களையும் தாங்கள் திராவிடர் என்பீர்களா?
  4. பிராமணியத்தை மட்டும் வேரறுக்க நினைக்கும் தாங்கள் , இங்கே நடக்கும் அத்தனை சாதிய சண்டைகளுக்கும் யார் மூல காரணம் என்று கள ஆய்வு செய்து அம்பலப்  படுத்தி உள்ளீர்களா?
  5. தமிழர்கள் மண்ணிழந்து, உரிமையிழந்து, நீராதாரங்களையும், மொழியையும், பண்பாட்டையும் இழந்தது மட்டுமில்லாமல் இப்போது உயிரையும் இழந்து இனத்திற்கான அத்தனை அடையாளங்களையும் இழக்க வேண்டும் என்கிறீர்களா?
  6. 1800 ஆண்டு காலமாக அடிமைப்பட்டு வாழ்ந்து வரும் தமிழரினம் இனியும் தலை நிமிர்ந்து வாழக் கூடாது என்பதற்காக திராவிட மாயையில் , பொதுவுடைமைப் பொயபுரைகளில் எங்களை அழியச் சொல்கிறீர்களா?
  7. பல லட்சம் தமிழர்கள் துடிதுடித்து செத்தபோது நாங்கள் எல்லாம் பெரியார் வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட  திராவிட இயக்க தலைவர்கள் மௌனம் காத்தனர், அரசியல் கந்தடிதனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அசைவிழந்து அழச் சொல்கிறீர்களா?
  8. இதே திராவிடத்தின் வழி வந்தவர்களின் ஆட்சி காலத்தில்தானே புதிது புதிதாக கோயில்கள் வருவதுக்கு வழியிட்டுள்ளனர். பிராமணியத்தை எதிர்ப்பவர்கள் கோவில் குடமுழுக்குகளையாவது தமிழில் செய்ய விட்டீர்களா? இல்லையே எம் கோவில்களில் தமிழ் இல்லை.
  9. பெரியார் வழி செயலாற்றிய நீங்களும் உங்கள் தலைவர்களும் எத்தனை தாய்மொழி வழிக் கல்வி பள்ளிகளை நிருவிவைத்துள்ளீர்கள்? 
இப்போது சொல்லுங்கள் நாங்கள் தமிழர்களா? திராவிடர்களா? இனியேனும் எங்களை திராவிடர்கள் என்று சொல்லை பதிக்காதீர்!

 தமிழர் களம்! தமிழர் நாடு!